அக். 13
திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும். தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது. மாநில தலைவர் ஜி கே விவசாய மணி என்ற ஜி சுப்பிரமணி தலைமை வகித்து பூஜை துவக்கி வைத்தார். இதில் எஸ்.சென்னியப்பன் மற்றும் மாநில, மாவட்டம், மாநகரம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி கிளை நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பொறி, சுண்டல், பொங்கல் வழங்கப்பட்டது.