சென்னை, அக்டோபர் – 20, இந்திய நல வாழ்வு நல்லறம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக சென்னை தி.நகரில் சித்தா மருத்துவ விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயணம் பேரணி நடைபெற்றது.
தி. நகர் தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து 5 கி.மீ தூரத்திற்கான “தமிழ் மருத்துவம் சித்தா ” என்ற தலைப்பில் வாக்கத்தான் நடை பயணத்தை
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத் தலைமை இயக்குனர் முத்துக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் செல்வி தாமு, அமெரிக்கா மோர் ஹவுஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜகோபால் ஸ்ரீதரன் அமெரிக்க மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 4 மருத்துவ மாணவிகள்
ஆகியோர் சித்தா த்தா மருத்துவ விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து பேசிய மோர் ஹவுஸ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் பேராசிரியர் ராஜகோபால ஸ்ரீதர்
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள புகழ்பெற்ற மோர் ஹவுஸ் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் தமிழர்களின் மருத்துவமான சித்த மருத்துவத்தை 2019 முதல் அங்கீகரித்த பாடத்திட்டமாக செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் இரண்டு பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு இந்தியா வந்து சித்த மருத்துவ பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்களின் பயிற்சியில் சித்தர் வாழ்வியல் மருத்துவம் , சித்தர் யோக மருத்துவம், வர்ம மருத்துவம், மூலிகை மருத்துவம் , உணவு மருத்துவம் சித்தர் நாடி பார்க்கும் கலை போன்றவற்றை ஆங்கில மருத்துவ முறையுடன் இணைத்து ஒருங்கிணைந்த முறையாக கற்று கொண்டுள்ளார்கள். சித்த மருத்துவம் சிறப்பை நம் மக்களும் அறியும் வகையில் இந்த வாக்கத்தான் பேரணி விளங்கும் என்று தெரிவித்தார்.