உலக நல வாழ்வு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை மருத்துவர் அலுவலர் எழிலரசி பங்கேற்பு
ஊத்தங்கரை ஏப்ரல் 08
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக நல வாழ்வு தினத்தையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் எழிலரசி தலைமை வகித்து உரையாற்றினார். இந்த நன் நாளில் கர்ப்பிணி பெண்களின் நலம் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தும் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்றப்பட்டது.
மேலும் உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் “ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்” (Healthy beginnings, hopeful futures) ஆகும், இது தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
உலக சுகாதார அமைப்பு, ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம், பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் போதுமான சுகாதார அணுகலை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
பிரசவ கால இறப்புகளை தடுக்க கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் கிடைக்கும் இலவச மருத்துவ சிகிச்சைகளையும்,ஆலோசனைகளையும் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்று கூறினார்.
மேலும் தலைமை மருத்துவ அலுவலர் மரு.எழிலரசி அவர்கள்(HIV) தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் சத்து மாவு வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மரு.தேவிகா, மரு.இளவரசன், செவிலியர் கண்காணிப்பாளர் விஜியா, நம்பிக்கை மையஆலோசகர்கள் காயத்திரி, சேரலாதன், ஆய்வகநுட்புனர் பாட்சா,தொண்டு நிறுவன களப்பணியாளர் கவிதா,ஹெச்ஐவி தொற்றுள்ளோர் நலசங்கம் களப்பணியாளர் செண்பகம் உட்பட மற்றும் பலர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.