ஈரோடு மே 2 7
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள கஸ்தூரிபா கிராமத்தை சேர்ந்தவர் பூபதி( வயது 29 )இவர் விபத்தில் படுகாயமடைந்து மூளை சாவு அடைந்தார் இதையொட்டி அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்
இதன்படி மூளை சாவு அடைந்த பூபதி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார் அங்கு பூபதி மூளை சாவு அடைந்ததை மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்து கொண்ட பிறகு அவரது சிறுநீரகம் கல்லீரல் இருதயம் கண் உள்பட 5 உடல் உறுப்புகள் 5 பேருக்கு பொருத்தப்பட்டது இதன் மூலம் அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்
இது குறித்து அபிராமி கிட்னி கேர் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன் கூறியதாவது
2019 ஆம் ஆண்டில் இருந்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 100 க்கும் மேல் செய்யப்பட்டது இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன ஈரோட்டில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இங்கு மட்டும் தான் செய்யப்படுகிறது
இந்தியாவில் ஒப்பிடும் போது உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு மற்ற அனைத்து மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது இருப்பினும் தமிழக மக்களுக்கு உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது எனவே மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டால் சிறுநீரகம் இருதயம் கணையம் கல்லீரல் தோல் கண் என்று பல உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டால் தானம் பெற்றவர்களுக்கு மறுவாழ்வு செய்யும் எனவே இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார் அப்போது டாக்டர் தங்கவேலு உடன் இருந்தார்.