சிவகங்கை:ஜன:31
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ‘ஸ்பர்ஷ்’ தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் துணை செவிலியர் பயிற்சி பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி அன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அண்ணல் மகாத்மாவின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லா உலகை உருவாக்கும் விழிப்புணர்வு தினநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,, மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியானது,
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை பகுதியில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.சத்தியபாமா, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.தர்மர், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மரு.கவிதாராணி(தொழுநோய்பிரிவு), மரு.மீனாட்சி (சுகாதாரம்), மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.