திருப்பத்தூரில் நடைபெற்ற 15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
திருப்பத்தூர்:ஜன:26, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பதினைந்தாவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் தனி வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சாரண சாரணியர் மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சென்ற இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நமது வாக்கு நமது உரிமை தேர்தலில் கட்டாயம் வாக்களிப்போம் பணம் பெற்றுக் கொண்டு வாக்குகளை விற்கக் கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.
மேலும் இந்த பதினைந்தாவது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப்போட்டி கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தேர்தல் துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.