சென்னை, அக்டோபர் -14,
உலக மனநல தினத்தை முன்னிட்டு மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் கல்லூரி ( எம்.எஸ் எஸ்.டபிள்யூ ) மற்றும் காவேரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
.
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் கல்லூரி (எம்.எஸ்.எஸ்.டபிள்யூ) ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து உலக மனநல தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் எல்லியட்ஸ் கடற்கரையில்
நடைபெற்ற விழிப்புணர்வு
பேரணியில் மாணவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் பலர் பங்கேறறனர் .
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் யாமினி கண்ணப்பன், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் கல்லூரியின் இளங்கலை உளவியல் துறையின் திட்டத் தலைவர் சங்கீத் கோபிநாத் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மன நல மருத்துவர் டாக்டர் . யாமினி கண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது :-
உலகமாயமாக்கல் காரணிகளால் பணிச்சுமை, வர்த்தக திறன் மேம்படுத்துதல்,இதனால் ஏற்படும் தனிமனித பாதிப்புகள், வாழ்க்கை முறை மாற்றங்களால் மனநல பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றது என்று மருத்துவத் தரவுகள் கூறுகின்றன. இது போன்ற பிரச்சினைகளை கலையவதற்கு சீரான உடற்பயற்சி, நடைபயிற்சி, மற்றவர்களிடம் அன்பு செலுத்துவது, மனம் விட்டு பேசுவது போன்றவற்றால் மன அழுத்தத்தை போக்கி அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் என்று தெரிவித்தார்.