வண்டலூரில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி
சென்னை வண்டலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து சாலை பாதுகாப்பு விபத்து இல்லா பயணம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளே இல்லாமல் அவற்றின் எண்ணிக்கை ஜீரோவாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்தே போக்குவரத்து போலீஸார் ஜீரோ இஸ் குட் என விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையிலெடுத்தனர். அதன்படி நாளை மறுநாள் ஆகஸ்ட் 26-ம் தேதி விபத்தில்லா தினம் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக பல்வேறு அமைப்புகளுடன் போக்குவரத்து போலீசார் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வண்டலூரில் போக்குவரத்து போலீசாருடன் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் இணைந்து ஆட்டோ ஓட்டுனர்களிடம் விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வண்டலூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து ஆட்டோக்களில் விபத்தில்லா தினம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க செங்கல்பட்டு மாவட்ட ஒருஙகிணைப்பாளர் வேலு தலைமையில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
மற்றும் சிறப்பு விருந்தினராக
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் சி.ரபீக்முகம்மது கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க
நிர்வாகிகள் ஜாபர் சிவா ரவி அஜ்மல் உசேன் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.