அரியலூர், ஜூன்:30
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஜெ.சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின் படி போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி துணை தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர் மரியா, உடையார்பாளையம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினர்.பின்னர் பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தொட மாட்டோம்,தொட மாட்டோம் போதை பழக்கத்தை தொடமாட்டோம்,உருவாக்குவோம்,உருவாக்குவோம் போதைப் பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்று கோசங்களை கூறிக்கொண்டு பதாதைகளை ஏந்தி சென்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் உடையார்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் வைஷ்ணவி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள்,ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சம்பத் நன்றி கூறினார்.இறுதியில் அனைவரும் எழுந்து நின்று போதைப் பழக்கத்தை தொடமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.