தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தருமபுரி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் சீட் பெல்ட் அணிதல், தலைக்கவசம் அணிதல் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி இப்பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோட்டீஸ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்த பேரணியானது இலக்கியம்பட்டி, தருமபுரி அரசு மருத்துவமனை, நான்கு ரோடு வழியாக மதிக்கோன் பாளையம் சென்று முடிவடைந்தது. இந்த பேரணியில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது குறித்து “சீட் பெல்ட் அணிவதால் உயிரை காக்கலாம்” என்ற வாசகங்கள் அடங்கியஸ்டிக்கரை ஒட்டியும், வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ்களை வழங்கியும், விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் போக்குவரத்து துறையினர் கலந்து கொண்டனர்.