நாகர்கோவில் ஜூலை 4
கன்னியாகுமரி மாவட்டம் நிர்வாகம் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுசீந்திரம் தாணுமாலை சுவாமி கோவில் நுழைவாயில் முன்பு பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சள்பை/ துணிப்பை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு பலகையை மாவட்ட ஆட்சியர்.ஶ்ரீதர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தமிழக அரசு நெகிழி இல்லா தமிழகம் என்ற தலைப்பில் மஞ்சப்பை அறிமுகப்படுத்தியது மேலும் இதைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து இன்று மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்,இதில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் நுழைவாயில் முன்பு மஞ்சப்பை பயன்பாடு குறித்த நன்மைகள் அடங்கிய விழிப்புணர்வு பலகையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து மஞ்சப்பை அப்பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது, மேலும் சுசீந்திரம் எஸ். எம்.எஸ்.பள்ளி மாணவ மாணவிகளிடம் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.