மதுரை செப்டம்பர் 29,
மதுரை செல்லூரில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திய ஊட்டச்சத்து மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிலையில் மதுரை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர் UPHC செல்லூர் மருத்துவர் காயத்ரி ஊட்டச்சத்தின் மாதம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துரைத்தார். சத்தான உணவுகளும் கீரை வகைகள் புரதம் நிறைந்த உணவுகள் நிறைய உட்கொள்ள வேண்டும் என்றும் ஃபாஸ்ட் ஃபுட்டுக்களை தவிர்த்து நாம் இயற்கை உணவுக்கு நாம் நம்மை பழக்கப்படுத்த வேண்டும் என்றும் அதுதான் நம் உடலுக்கு ஆரோக்கியம் மிக்கது என்றும் எடுத்துரைத்தார். இறுதியாக ராஜ சுமதி SHN UPHC.
நன்றியுரை வழங்கினார்.