மதுரை செப்டம்பர் 30,
மதுரை மாவட்டம் குலமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் நடத்திய தூய்மை பணியாளர்களுக்கான சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் மதுரை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான சுகாதார ஆய்வாளர் மேஷ் தீபக் பேசுகையில், தூய்மை பணியாளர்களிடையே நம்மை நாமே முதலில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் அதற்காக கையுறைகள் அணிவது தகுந்த காலணிகள் அணிவது மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தும் போதும் தகுந்த முறையில் பாதுகாப்பான முறையில் வேலையை செய்ய வேண்டும். காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் சுகாதார சீர் கேட்டிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மேலும்
குலமங்கலத்தில் 100 நாள் வேலை பணி பொறுப்பாளர் மகேஸ்வரி
நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரை வழங்கினார்.