அரியலூர், ஜூலை:12
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்ப நலத்துறை மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 11 நாள் உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் அரியலூர் மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார், முன்னதாக உலக மக்கள் தொகை தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கையேடுகளையும் வெளியிட்டார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் இளவயது திருமண சட்டப்படி குற்றம் ஆணுக்கு நிகராக பெண்ணையும் படிக்க வைப்போம், ஒன்று பெற்றால் ஒளிமயம்! அதிகம் பெற்றால் அல்லல்மயம்! உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டும் சென்றனர்.
மேலும், அன்னை தெரசா செவிலியர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். மேலும், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் மரு.ராஜா, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மாரிமுத்து மற்றும் மாவட்ட குடும்ப நலச் செயலக பணியாளர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.