ராமநாதபுரம், அக்.20-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய கடற்படை வீரர்களின் விழிப்புணர்வு வாகனம் வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கடற்படை வீரர்களின் விழிப்புணர்வு வாகனத்தை பார்வையிட்டார்.
இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை தலைமை இடத்தில் இருந்து 15 தலைமை அலுவலர்கள் மற்றும் வீரர்கள் கொண்ட குழு சென்னை முதல் கன்னியாகுமரி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 17ஆம் தேதி துவங்கப்பட்டு ஆறு நாட்களில் 1800 கிலோமீட்டர் தூரம் பயணித்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடற்படை விழிப்புணர்வு பேரணியை கடற்கரை பகுதிகளை யொட்டி உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களிடம் பாரம்பரியம் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புகளை நினைவு கூர்ந்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த கடற்படை வீரர்களின் வாகனப் பேரணி கடலோரப் பகுதிகளில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடம் பாரம்பரிய வரலாற்று சிறப்புகளை எடுத்துரைத்து செல்வார்கள். தொடர்ந்து கடற்படை வீரர்கள் வாகனப் பேரணி கன்னியாகுமரி பகுதிக்கு சென்றடையும் என ராமேஸ்வரம் கடற்படை பொறுப்பு அலுவலர் (கமாண்டர்) நரேந்திர சிங் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.