நாகர்கோவில் ஜூன் 9
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நாகர்கோவில், வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஒய்.ஆர்.மஹால் திருமண மண்டபத்தில் வரும் 11ம் தேதி காலை நடைபெற உள்ளது.
தொழில் வணிக துறையினரிடம் வருமான வரி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரி செலுத்துவோரின் சேவைகளுக்காக மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள், டிஜிட்டல் யூகத்தில் வரி செலுத்துவோரின் பங்கு மற்றும் கடமைகள் குறித்து விளக்கவும் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.இதில் வருமான வரி தொடர்பான பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சஞ்செய் ராய்,தலைமை ஆணையர் வசந்தன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளார்கள். எனவே நாகர்கோவில் வருமான வரி சரகத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல், திங்கள்சந்தை, குலசேகரம், மார்த்தாண்டம ஆகிய பகுதிகளை சேர்ந்த வரி செலுத்துவோர், வணிகர்கள், பட்டய கணக்காயர்கள், வரி ஆலோசகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். என நாகர்கோவில் வருமான வரி அதிகாரி . வேணுகுமார் தெரிவித்து உள்ளார்.