திருவள்ளூர் மாவட்டம்
அம்பத்தூரில்
மாணவர் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவரும் பள்ளிக் கல்வியில் இடைநிற்றலை குறைக்க விடுமுறை எடுக்காமல் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வர வேண்டும் என்று நினைப்பவரும் பள்ளியின் தலைமை ஆசிரியருமான ஆர்.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் வெள்ளானூர் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 500 மதிப்பெண் பெரும் மாணவர்கள் அனைவரையும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றிக்காட்ட விமானத்தில் அழைத்து செல்வதாகவும் வாக்குறுதி அளித்து ஊக்கப்படுத்தினார்.
வேல்ஸ் யூனிவர்சிட்டி மூலமாக நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் லலிதா கீதா ஆகியோர் பெற்றோர்கள் முன்னிலையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பெற்றோர்கள் மாணவருடைய ஒழுக்கத்தின் மீதும் கல்வியின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி அடைய வேண்டும் என்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறக்கூடிய அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பள்ளி அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் மண்ணால் செய்யப்பட்ட ஓவியங்களின் படைப்புகளை பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் காட்சிப் படுத்தினர்.
மேலும் இவ்விழாவில் பள்ளியில் பணிபுரியக் கூடிய கணித ஆசிரியர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் அறவாழி அவர்களும் பள்ளி மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமி மற்றும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் பிரண்ட்ஸ் ஆடியோ சிவகுமார் மற்றும் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுடைய பெற்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.