கரூர் – செப் -5
அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கரூர் மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார்.
ஊர்வலமானது அரசு கலை கல்லூரியில்தொடங்கி மில்கேட் வரை சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில், ஊட்டச்சத்து தொடர்பான பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், 100- க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.