நாகர்கோவில் ஜூலை 25
இந்திய உடல் உறுப்பு தான தினத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பாக விழிப்புணர்வு ஓட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நாகர்கோவில் ஹிந்து கல்லூரி என் எஸ் எஸ் குழுவினரின் பறை இசை முழக்கத்துடன் நடைபெற்றது . இதில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம் ஆர். காந்தி கலந்துகொண்டு விழிப்புணர்வு ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வத்தார். நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் 100 தபால் ஊழியர்களுடன் நாகர்கோவில் ஹிந்து கல்லூரியில் இருந்து சுமார் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் – டவர் சந்திப்பு – வேப்பமூடு சந்திப்பு முடித்து மீண்டும் அதே வழியாக விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஹிந்து கல்லூரி முதல்வர் பத்மநாபன், மற்றும் உதவி பேராசிரியர்கள் பொன்னம்மாள், தாணம்மாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் அவர்கள் மேற்பார்வையில் விழிப்புணர்வு ஓட்டம் சிறப்பாக நடைபெற்றது.