கோவை நவ:18
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு அகல்யா கண் மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி ஜீப் டூரிசம் மற்றும் பொள்ளாச்சி அட்வென்ச்சர் கிளப் இணைந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கி வேலந்தாவளம் அருகே உள்ள அஹல்யா மருத்துவமனை வரை சுமார் 35 கிலோமீட்டர் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் முனைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். பொள்ளாச்சி சைக்கிள் கிளப் தலைவர் மருத்துவர் வரதராஜன், செயலாளர் பரமேஸ்வரன் துணைச்செயலாளர் பர்கத்துல்லா, திமுக தலைமை குழு உறுப்பினர் வழக்கறிஞர் அதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி ஜீப் டூரிசம் நிறுவனர் செல்வம், பொள்ளாச்சி சதுரங்க சங்க தலைவர் கருணாநிதி, அஹல்யா கண் மருத்துவமனை மேலாளர் சிவப்பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் சைக்கிள் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.