கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கிராம விழிப்புணர்வு முகாம் ஊத்தங்கரை C6 காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில்
கதவணி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி காந்திலிங்கம் முன்னிலையில் கதவணி தனியார் மஹாலில் பொதுமக்களுக்கு கிராம விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் உதவி காவல் ஆய்வாளர் கணேஷ் பாபு, மோகன் ஆகியோர் சட்ட ஒழுங்கு பிரச்சனை, மக்கள் நலமுடன் வாழ அறிவுறுத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரியா பிரபு , வார்டு உறுப்பினர் மாது, சக்திவேல் , வெங்கடேசன் மற்றும்
கதவணி பிரமுகர் ராமன் ,எத்திராஜ், சந்திரன், மணிகண்டன், மாதேஸ், திலகரசன், மோகன், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு காவல்துறை அலுவலர்களிடம் சந்தேகங்களும், அறிவிப்புகளும் கேட்டு தெரிந்துக் கொண்டனர்.
ஊத்தங்கரை காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு முகாம்
Leave a comment