நாகர்கோவில் அக் 11
உலக மனநல தினத்தினை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பாக மன நலன் சார்ந்த விழிப்புணர்வினை அஞ்சல் ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மன நலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 10.10.2024 அன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி நாகர்கோவில் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அதிகாரி அஜிகுமார், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் சுமார் 75 அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பணி ஓய்வு பெற்ற
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னால் மருத்துவ கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் விழிப்புணர்வு உரையாற்றினார்.