அரியலூர், ஜூன்:01
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி அரியலூர் ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நேற்று நடைபெற்றது.
ரயில்வே காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரயில் நிலைய மேலாளர் பாலுலால் மீனா, அரியலூர் இருப்புப் பாதை புற காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரயில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏற்படுத்தி பேசினர்.
நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சரவணன், சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர் அபிராமி, போக்குவரத்து ஆய்வாளர் விஸ்வநாத், சுகாதார ஒப்பந்த மேற்பார்வையாளர் கருணாமூர்த்தி மற்றும் ஒப்பந்த சுகாதார பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் காலையில் வைகை ரயிலில் சென்ற பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.