சிவகங்கை ஏப் 8
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் நா. அப்ஷான் பானு மற்றும் மீ. பாலசுப்புலெட்சுமி கிராமபுற வேளாண்மைப் பயிற்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகங்கை மாவட்டம் S. புதூர் வட்டாரத்தில் K.புதுப்பட்டி கிராமத்தில் நல்லதம்பி துரைராஜ் என்பவரின் மிளகாய் தோட்டத்தில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் நீல அட்டை ஓட்டுப் பொறியின் பயன்பாட்டை செயல் விளக்கம் மூலம் எடுத்துரைத்தனர்.அதனுடன் சேர்த்து இலைப் பேனின் உயிரியல், பாதிப்பு அறிகுறிகள் மற்றும் அதன் மேலாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.