திண்டுக்கல்
மே:17
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் போதையில்லா பாரதம் குறித்த விழிப்புணர்வு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை, அமைதி அறக்கட்டளை மற்றும் ரோஜா வனம் நிறுவனத்தின் சார்பில் வேடசந்தூரில் உள்ள ஆத்து மேட்டில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட் அருகில் நடைப்பெற்றது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அமைதி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் பவித்ரா வரவேற்புரையிலும், குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி , அனைத்து வர்த்தக சங்க தலைவர் சுகுமார் , தொழில் அதிபர் சதாசிவம், சூர்யா பவுண்டேஷன் சமூக ஆர்வலர் ஆதிமூலம், விவசாயிகள் நல சங்க தலைவர் செல்வம் மற்றும் தமிழர் உணர்வாளர் கூட்டமைப்பு தலைவர் ரவிகுமார் ஆகியோர்களின் முன்னிலையிலும்,போதையில்லா பாரதம் குறித்த விழிப்புணர்வு பாளர் கலைமாமணி பழனியா பிள்ளை , அமைதி அறக்கட்டளையின் தலைவர் பா.ரூபபாலன் அமைதி அறக்கட்டளையின் மேலாளர் மற்றும் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு உறுப்பினர் ஆ.சீனிவாசன் ஆகியோர்களின் கருத்துரையிலும் , ஆட்டோ ஸ்டான்ட் மற்றும் வேன் ஸ்டான்ட் டிரைவர்களிடமும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி கோசங்களுடன் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்த நிகழ்வுகளை தன்னார்வலர்கள் திவ்யா, மணிமேகலை, சங்கீதா, புவனேஸ்வரி,முனியாண்டி , ராஜேஸ்வரி ஆகியோர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.நிகழ்ச்சியின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் ரேணுகா தேவி நன்றியுரை ஆற்றினார்.