காஞ்சிரங்குடியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா
சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பங்கேற்பு
ராமநாதபுரம், ஆக.29-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 19 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் விழாவில் தலைமை வகித்து வடமாடு மஞ்சுவிரட்டு துவக்கி வைத்தார். விழா ஒருங்கிணைப்பாளர் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஊர் தலைவர் மட்டும் ஜல்லிக்கட்டு வடமாடு எருது கட்டு பேரவை தலைவர் ஆதித்தன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் டாக்டர் ராஜசேகர், வீரத்தமிழர் வடமாடு பேரவை மாநில கௌரவத் தலைவர் தங்கராஜ், திமுக மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை சிவகங்கை உட்பட ஐந்து மாவட்டங்களில் இருந்து 14 மாடுகள் கலந்து கொண்டன. இந்த மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் வீரங்களை வெளிப்படுத்தினர். விழா ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் யாதவர் சங்கம் கிருஷ்ணாபுரம் விளையாட்டு குழு அனைத்து மகளிர் மன்றங்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.