சூரிய தென்றல் பெண்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில்
விருதுகள் வழங்கும் விழா
சென்னை, அக்டோபர்- 25, சூரிய தென்றல் பெண்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில்
தமிழ்
சமூகத்தில் சிறந்த தொண்டாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்குவது குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பத்திரிகையாளார் சந்திப்பில் அமைப்பின் நிர்வாகிகள் விஜயலட்சுமி, மாசிலாமணி, ஆகியோர் கலந்து ந்துகொண்டு தெரிவித்ததாவது:-
“சமூகத்திற்கு சிறந்த தொண்டாற்றியமைக்காக” நீதிபதி சந்துரு, சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சகாயம் ஐ.ஏ.எஸ், ஆகியோருக்கு சிறந்த சமூகநீதி ஆர்வலருக்கான விருதுகளும், சிறந்த ஊடகப்பிரிவுகாக என். ராம் மற்றும் படைப்புத் திறனுக்காக எழுத்தாளர் இந்திரன் ஆகியோருக்கு
மாசிலா – விஜயா தலைப்பில் விருதுகள், ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இதில் சிறப்பு அழைப்பாளாராக முன்னாள் இஸ்ரோவின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு விருதுகளை வழங்குவார்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் நவம்பர் மாதம் 18ஆம் தேதி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக
அமைப்பின் நிர்வாகிகள் மாசிலாமணி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.