குளச்சல் டிச 17
குமரி மாவட்டம் குளச்சலில் நட்சத்திரா அவார்ட்ஸ் சார்பாக நேற்று மாலை தனியார் மண்டபத்தில் வைத்து இளம் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நட்சத்திரா கல்ச்சுரல் ட்ரஸ்ட் சேர்மன் சுஜித் நட்சத்திரா தலைமையில் நடைபெற்றது.
இதில் குளச்சல் உடையார்விளை பகுதியில் செயல்பட்டு வரும் மிதுனா எலும்பு முறிவு மருத்துவமனையின் உரிமையாளர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஶ்ரீராம்-க்கு ஆர்த்தோ பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக சிறந்த சாதனையாளருக்கான விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. விருதினை இந்திய சோலார் அசோசியேஷன் தலைவர் நரசிம்மன் வழங்கினார். இந்நிகழ்வில் பெண்கள் நல மருத்துவர் டாக்டர் ஐஸ்வர்யா மற்றும் லார்வின் பார்மா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் மண்டல மேலாளர் மற்றும் பல்வேறு நிறுவனங்களை சார்ந்த தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.