நாகர்கோவில் டிச 19
சென்னை ரோட்டரி கிளப் ஆப் கிரௌன் மற்றும் பாரதீய நாட்டு வைத்திய மகா பாடசால இணைந்து கோவையில் நிர்மலா மகளிர் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் 29-ம் தியதி அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சியை சார்ந்த
திராவிட முன்னேற்ற கழக அயலக அணியின் மாவட்ட துணை அமைப்பாளரும் மற்றும் ஓமான் சொசைட்டி ஆப் இன்ஜினியரிங் -யின் முக்கிய நிர்வாகியுமான மஸ்கட் V. N. ராஜன்-க்கு சிறந்த சமூக சேவகர் 2024 விருது வழங்கி சிறப்பிக்க பட்டது.
இவர் கடந்த காலங்களில்
நலிவுற்ற மக்களுக்கு கல்வி உதவி
ஏழை மக்களுக்கு மருத்தவ உதவி
இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஏராளமான மாநில மற்றும் மாவட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தியும், ஏராளமான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார்.
அதேபோல் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கியும் உள்ளார்.
மேலும் திக்கற்ற மக்களுக்கும் வயது மூப்பு அடைந்த மக்களுக்கும் உணவு அளித்து பாதுகாத்தல்,
அடிப்படை வசதியான வீடு பழுதடைந்த மக்களுக்கு உதவி செய்தல்,
வேலை வாய்ப்பு இன்றி வருமானம் இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல்,
பள்ளி கல்லூரிகளில் தொழில் நுட்ப கருத்தரங்கை நடத்துதல்,
பொதுமக்களுக்கு கொடிய உயிர்கொல்லி நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,
அரசின் நல திட்டங்களை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டுசேர்த்தல்,
பூதப்பாண்டி பேரூராட்சி பகுதிகளில் கண்காணிப்பு கேமெராக்களை அமைத்து கொடுத்து காவல்துறைக்கு உதவி செய்தல்,
அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் அமரும் நாற்காலிகள் மேசைகள் காஸ் அடுப்பு போன்ற உபகரணங்களை வழங்குதல்,
குறிப்பாக கொரோனா மற்றும் ஓஹி புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தன்னுடைய மாத வருமானம் முழுமையும் பாதிக்க பட்ட மக்களுக்காக செலவு செய்தமை போன்ற பல்வேறு சமூக சேவைகளை செய்து கொண்டிருக்கும், இவர் புவி வெப்பமடைதலை தடுத்தல் மற்றும் சுற்று புற சுழலும் அதன் மாசுபடுதலை நவீன தொழில் நுட்பத்துடன் கட்டுப்படுத்தும் போன்ற உயரிய தொழில் நுட்பவியலராக போன்றவற்றை கட்டமைத்ததற்க்காக வெளிநாடுகளிலும் சிறப்பான சேவை செய்தமைக்காக அநேக விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற டிசம்பர் மாதம் 22-ம் தேதி அன்று அவருடைய பிறந்த மண்ணாகிய பூதப்பாண்டி பேரூராட்சியில் வைத்து சென்னை ரோட்டரி கிளப் ஆப் கிரௌன் மற்றும் கேரளாவை சார்ந்த பாரதீய நாட்டு வைத்திய மகா பாடசால இணைந்து சிறந்த சமூக சேவகர் 2024 விருதினை பெற்றமைக்காக மாபெரும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.