திண்டுக்கல் மாங்கரையில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மாணவர் நற்பணி மன்றம், என்.எஸ். நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா.
ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை, திண்டுக்கல் என்.எஸ். லயன்ஸ் சங்கம் சார்பில் ரெட்டியார்சத்திரத்தில் அருகில் உள்ள மாங்கரையில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம் மன்ற ஆலோசகர் முனைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். லயன் சங்க தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார், அப்துல் கலாம் மன்ற ஒருங்கிணைப்பாளர் மாங்கரை பாரதி அனைவரையும் வரவேற்றார். நிறுவனர் சமூகசேவகர் டாக்டர் மருதைகலாம் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக சூர்யா பவுண்டேசன் சதாசிவம் , ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மணிகண்டன் பரமேஸ்வரி,லயன்ஸ் சங்க பட்டய உறுப்பினர்கள் ராஜேஷ்கண்ணா, ஜெகநாதன், வார்டு உறுப்பினர் மாரியம்மாள்,என் தாய் அறக்கட்டளை நிறுவனர் ஷேக் அப்துல்காதர்,சமூக ஆர்வலர் இன்னாசிராஜ், பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் சுரதா ,எ. எம்.எஸ்.சன். ஸ்டார் முருகேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளின் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும் , பொதுமக்களுக்கும் பொங்கல் , கரும்பு, பரிசு பொருட்கள் வழங்கினார்கள். இன்றைய இளைஞர்கள் விவசாயத்தை ஈடுபட வேண்டும், விளையாட்டில் மாநில இந்திய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கப்பட்டது.இதில் மன்ற நிர்வாகிகள் பெருமாள், கணேசன் , ஊர் இளைஞர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துகார்த்தி நன்றி கூறினார்.