திண்டுக்கல், மே. 20-
திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள் , வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா.
திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி மற்றும் புனித ஜான்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள ஜெ.கே. ஆர்.கராத்தே பயிலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் புரவலர் நாட்டாண்மை டாக்டர்.என்.எம்.பி.காஜாமைதீன் தலைமை தாங்கி தேசிய அளவிலான வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நினைவுபரிசுகளை வழங்கினார். வகித்தார். திண்டுக்கல் மாவட்ட நெட்பால் சங்க துணைத் தலைவர், கே.சாதிக் முன்னிலை வகித்தார்.
பட்டேல் ஹாக்கி அகாடமி சங்கத் தலைவர் ரமேஷ்பட்டேல், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கச் செயலாளர் எஸ்.சண்முகம்,
மாவட்ட கைப்பந்து செயலாளராக ராஜசேகர், மாவட்டம் மல்யுத்த சங்க தலைவர் நாட்டாண்மை எஸ்.கார்த்திகேயன், துளிர் அறக்கட்டளை நிறுவனர் ஜீவானந்தம், வள்ளிநாயகி கல்வி அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், தேசிய கால்பந்து வீரர் ர் டைட்டஸ், மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் உதவிச் செயலாளர் சேசுராஜ், புனித ஜான்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் ஜான் ஆரோக்கியம், கரூர் அரசு கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், பட்டேல் ஹாக்கி அகாடமி செயலாளர் வி.ஞானகுரு உட்பட பலர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள்,வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அடாத மழையிலும் விடாமல் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மனிதநேயச் செம்மல் வி.ஞானகுரு கலந்து கொண்டு சிறப்பாக ஒருங்கிணைத்தார். யோகா மாஸ்டர் வெ.இராஜகோபால், யோகா ஆசிரியர் நித்தியா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.