அஞ்சு கிராமம் நவ-27
அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் அறிக்கையில் கூறியிருப்பதாவது
அஞ்சு கிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் விளை நிலங்களை அரசு அனுமதியில்லாமல் பிளாட் போடுவதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். டி.டீ சி.பி,மற்றும் பேரூராட்சி அனுமதி பெறாத இடங்களை வாங்கவேண்டாம். பணங்களை கொடுத்து ஏமாற வேண்டாம். அதையும் மீறி வாங்கினால் சாலை வசதி, தெருவிளக்கு, வடிகால் வசதி, குடிநீர் இணைப்பு வழங்கப்படாது. விளை நிலங்களை குடியிருப்புகளாக மாற்றுவதற்கு அரசு அனுமதி கிடையாது.
நில புரோக்கர்கள் நஞ்சை நிலங்களை அரசுஅனுமதியின்றி குறைந்த விலைக்கு வாங்கி, பிளாட்டுகளாக மாற்றி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். விளை நிலங்கள் குடியிருப்புகளாக மாற்றம் செய்யப்படுவதால் உணவு உற்பத்தி பாதிப்பு ஏற்படும். சமீப காலமாக விவசாய நிலங்கள், பாசன நிலங்கள், தோட்டம் மற்றும் காடு அதிக அளவு பிளாட்களாக மாறிவருகிறது. அரசு அங்கீகரிக்கப்படாத விளை நிலங்களை புரோக்கர்கள் பொதுமக்களிடம் மூளை செலவு செய்து விற்று வருகின்றனர். மேலும் தங்களது குடும்ப செலவுக்காக பிளாட்டுகளை விற்க செல்லும் பொழுது பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும நிலத்தைப் விற்ற புரோக்கர்கள் மற்றும் ரியல எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாமலும் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது. மேலும் வடிகால் ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன விளைநிலங்கள் புற்றீசல் போல் குடியிருப்புகளாக மாறி வருவதை அரசு உடனடியாக வழிகாட்டு நெறிமுறை அமைக்கவேண்டும் (அல்லது) அரசாணை பிறப்பித்து நல்ல ஒரு தீர்வு வழங்க வேண்டும் என கூறினார்