தென்காசி மாவட்டம் தென்காசி காசிவிசுவநாதர் ஆலயம் முன்பு நகராட்சி சார்பில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தமிழகத்தில் நெகிழி பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே தென்காசி நகராட்சி சார்பில் நெகிழி இல்லா நகராட்சியாக மாற்ற வேண்டி மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் நெகிழி பொருட்களை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு வணிகர்களுக்கு மஞ்சள் பை விநியோகம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நகராட்சி ஆணையாளர், நகர்மன்ற உறுப்பினர்கள், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், வணிகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.