கோவை மார்: 21
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வாகராயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலர்ட் சமூக சேவை அமைப்பு மற்றும் லட்சுமி ரிங்ஸ் டிராவலர் தனியார் அமைப்பு இணைந்து வெளிப்புற இதய மீட்பு கருவியை மாவட்ட ஆட்சி தலைவர் கே. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் அவர்களால் துவங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் மேலாளர் ரவி சாம் அவர்கள், அலர்ட் சேவை அமைப்பு நிறுவனர் ராஜேஷ் ஆர். திரிவேதி, மருத்துவர் பாலுசாமி, LRT நிறுவன பொறுப்பாளர் கே. எஸ். ரவீந்திரகுமார், மற்றும் வாகராயம்பாளையம் ஊராட்சி தலைவர் கே. பி. சசிகுமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இந்த கருவியானது ஆபத்தான காலகட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருவியின் சிறப்பம்சம் குறித்து விளக்கப்பட்டது. LRT நிறுவனத்தின் சார்பில் அலர்ட் சமூக சேவை அமைப்பின் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த கருவியை பொது மக்களுக்கு சேவை அமைப்பின் உறுப்பினர்களும், செவிலியர்களும் இந்த கருவியின் சிறப்பு அம்சங்களை பொதுமக்களிடம் விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.