தஞ்சாவூர். நவ. 20
தஞ்சாவூர் மாவட்டஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
இதில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை ,குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ,கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 425 மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் மேலும் தாட்கோ மூலம் முதலமைச்சர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சமூக பொருளாதார அதிகாரம் அளித்து வளம் உண்டாக்க தொழில் முனைவு திட்டம் செயல்முறை ஆணையினை 5 பயனாளிகளுக்கு வழங்கினார்.இது சுற்றுலா வாகனம், பயணிகள் ஆட்டோ, ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப் போன்ற பல்வேறு தொழில் தொடங்குவதற்கான ஆணையாகும், தொடர்ந்து திருவிடைமருதூர் தாலுக்காவை சேர்ந்த நாராயணசாமி காதொலி கருவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்ததை ,தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உடனடியாக தீர்வாக காதொலி கருவி வழங்கப்பட்டது இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தாட்கோ மேலாளர் ரங்கராஜன், உதவி ஆட்சியர் ( பயிற்சி) உக்கர்ஷ் குமார் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்