திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ஶ்ரீமகாஜோதி மண்டபத்தில் திண்டுக்கல் டவுன் ஆட்டோ டிரைவர்ஸ் நல அறக்கட்டளை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் ஜி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் டவுன் ஆட்டோ டிரைவர்ஸ் நல அறக்கட்டளையின் தலைவர் கே.ரெத்தினம் சீருடைகளை வழங்கினார். இதில் செயலாளர் எஸ்.சண்முகம், துணை செயலாளர் எம்.திபூர்சியஸ், பொருளாளர் எஸ்.என்.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வருடத்திற்கு 1500 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டு வருகிறது.இதில் 5-வது தவணையாக 350 நபர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.