தக்கலை, டிச- 5
தக்கலை அருகே முத்தலக்குறிச்சி, காவு விளைபகுதியில் ஸ்ரீ பரத்தியம்மன், நாகராஜர் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் ஆகம விதிப்படி தினந்ந்தோறும் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளம் பேர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பூசாரி வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த ஒன்றரை அடி உயர ராமர் சிலை, சிறிய அளவிலான ஐந்து குத்துவிளக்குகள் திருட்டு போயிருந்தது.
இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்வதில், அதில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கோவில் பூட்டை உடைத்து சாமி சிலை மற்றும் குத்து விளக்குகளை திருடி சென்ற பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட முந்தியவரை வலை வீசி தேடி வருகின்றனர்.