களியக்காவிளை, டிச- 5
களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (57). ஆட்டோ டிரைவர் இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேன்சர் நோயால் இறந்து விட்டார். இதனால் விஜயன் மது பழக்கத்துக்கு அடிமையானார். இவருக்கு முதுகு எலும்பு தேய்வு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் சகோதரர் சௌந்தர்ராஜன் என்பவருடன் பைக்கில் விஜயன் சென்று கொண்டிருந்த போது, திடீரென பைக்கில் இருந்து மயங்கி கீழே விஜயன் விழுந்துள்ளார். உடனடியாக சௌந்தர்ராஜன் அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.