நாகர்கோவில் ஆக 29
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி, மாவட்டத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சிறார் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல், வாகனத்தில் சாகசங்கள் செய்தல், தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனம் நிறுத்தி விபத்து ஏற்படுத்துதல் போன்ற விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா மேற்பார்வையில் கோட்டார் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில், சார்பு ஆய்வாளர் ஆல்ட்ரின் சுமித் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் வேப்பமூடு அருகே
வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது
குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த நாகர்கோவில் சகோதரர் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.