மதுரை ஜூலை 3,
மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு ஆடிப்பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மேலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் இத்திருக்கோயிலில் நடைபெற்றது. இதில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் , திருக்கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் , கண்காணிப்பாளர் , அறங்காவலர்கள் ஊமச்சிகுளம் மற்றும் மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர், வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.