கோவையில்
200 பங்கேற்பாளர்களை ஈர்த்த அதுல்யா சீனியர் கேர்-ன்
முதியோரை கனிவுடன் பராமரித்தல் வாக்கத்தான் நிகழ்வு
கோவை செப் 03 இந்தியாவில் முதியோர் பராமரிப்பு மற்றும் உதவப்படும் வாழ்க்கை சேவை பிரிவில் முன்னணி அமைப்பாக திகழும் அதுல்யா சீனியர் கேர், கோயம்புத்தூரின் ரேஸ் கோர்ஸ் சாலையில் முதியோரை கனிவுடன் பராமரித்தல் (“Caring for a Senior”) என்ற பெயரில் ஒரு வாக்கத்தான் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.
இது தொடர்பாக
அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவனரும் & தலைமை செயல் அலுவலருமான ஸ்ரீனிவாசன்
கூறுகையில் மூத்தகுடிமக்களின் நலவாழ்வு மற்றும் கண்ணியத்தை வலியுறுத்திய இந்நிகழ்வில் 200-க்கும் அதிகமான நபர்கள் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். தன்னார்வலர்கள், கார்ப்பரேட் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்த இந்த வாக்கத்தான்
நிகழ்வில்
முதியோர் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்தை முன்னிலைப்படுத்தும் இந்நிகழ்வு, பார்வையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டிருக்கிறது.
என்று கூறினார்.
மேலும்
இந்நிகழ்வை காட்சிப்படுத்தும் டி-ஷர்ட்கள் மற்றும் தொப்பிகளை பெருமிதத்துடன் அணிந்த பங்கேற்பாளர்கள் கோயம்புத்தூரின் அழகான பாதைகள் வழியாக நடைபெற்ற இந்த நடை பயணத்தில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.