கோவை ஆகஸ்ட்:24
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு கோவை மாவட்டம் சார்பில் தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பணியிடத்தை மீள, தரம் உயர்த்தி வழங்கிட மாவட்ட ஆட்சியர் மூலமாக நிதித்துறை செயலாளருக்கு முறையீடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு டி. என்.எஸ்.ஓ.யூ மாவட்ட தலைவர் ஜா. நிமலன் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். டி.என்.எஸ்.ஓ யூ மாவட்ட துணை தலைவர் டி.அசோகன், மாவட்ட இணை செயலாளர் இரா. சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நில அளவர் பணியிடம் தரம் உயர்த்தி தர முடியாத நிலை தொடர்கின்றது.
எனவே, மிக அளவை இயக்கத்தாலும், வருவாய் துறை செயலாளராலும் குறுவட்ட அளவராக தரம் உயர்த்த நிதித்துறை செயலாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட கோப்பின் மீது விரைந்து ஒப்புதல் வழங்க கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி நிதித்துறை செயலாளருக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக முறையீடு வழங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் சையத் உசேன், மாவட்டத் தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு மருத்துவ நிர்வாகத்துறை ஊழியர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர்கள் சதீஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றியுரை கூறினார்.