திண்டுக்கல் ஜூலை :04
தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களும் (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.
இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு(JAAC) அவசர பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தின்படி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் பழைய நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக சென்று திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தின் முன்பாக வழக்கறிஞர்கள் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க செயலாளர் கென்னடி முன்னிலை வகித்தார் .
இந்தப் ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க பொருளாளர் ஜெயலட்சுமி மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.