பழைய வத்தலகுண்டு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் முற்றுகையிட்டு ஆசிரியைவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வருவதால், மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 210 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதே ஊரை சேர்ந்தவர் கொத்தனார் பொன்னர் (44) இவரது மகன் இரண்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சீவி (7) இவர் நேற்று காலை பள்ளிக்கு வரும்போது, வடமாநிலம் தோற்றத்தில் உள்ள இரண்டு பேர் ஸ்கூட்டி வந்து, உன்னை உங்க அப்பா அம்மா அழைத்து வரச் சொல்கிறார்கள் என கூறி, அந்த மாணவன் சஞ்சீவியை கடத்தியுள்ளனர்.
மாணவன் அழறல் சத்தம் கேட்கும் போது அந்த வழியாக வந்த இரவு காவலாளி ஒருவர் அவர்களை விரட்டிய போது, மாணவனை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மாணவன் பள்ளி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் பள்ளி நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று காலை மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரும் போது, ஒரு ஆம்னி காரில் வந்து மாணவர்கள் யோகேஷ், கிருஷ்ணா, சித்தார்த் உட்பட நான்கு மாணவர்களை கடத்த முயற்சி செய்துள்ளனர். ஏற்கனவே அந்த ஆம்னி காரில் நான்கு மாணவர்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது அதில் பெண்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆம்னி காரில் மாணவர்கள் கடத்தும் போது அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கப்பாக்கம் இருந்தவர்கள் ஓடிச் சென்ற போது ஆம்னி காரில் இருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் பழைய வத்தலகுண்டு அரசு தொடக்கப்பள்ளியில் முற்றுகையிட்டு ஆசிரியையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வத்தலகுண்டு போலீசார் மற்றும் நிலக்கோட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது, வத்தலகுண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.