நாகர்கோவில் – அக் – 02,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய மீனவர் சங்கம் மாநில தலைவர் அன்டன் கோமஸ் தலைமையில்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவில் இந்திய அபூர்வ மணல் ஆலை அணு கனிம சுரங்க திட்டம் குறித்து ஆட்சேபனை மற்றும் மீனவர்களின் வாழ்விடம் வாழ்வாதாரம் உடல் ஆரோக்கியம் பாதுகாத்திட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டி மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் இந்திய அபூர்வ மணல் ஆலை நிறுவனம் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ் மிடாலம், மிடாலம், இணையம் புத்தன்துறை,ஏழு தேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் அணு கனிம சுரங்கங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் மேற்கண்ட மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் ஏற்கனவே செயல்படுத்தி வரும் அணுக்கணிம சுரங்கங்கள் பணி காரணமாக திட்டம் விரிவாக்கத்திற்கு முன்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் திட்டத்தின் தாக்கம் மற்றும் புதிதாக விரிவாக்கம் செய்யப்படவுள்ள திட்டத்தின் தாக்கத்தையும் இணைத்து அருகாமையில் உள்ள சுமார் 10 கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தொழிற் திட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் மாசு அளவின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும், அது கனிம சுரங்கங்கள் மற்றும் சார்ந்த பணியில் இருந்து வெளியாகும் கதிரியக்கத் தாக்கம் அதாவது அருகாமைப் பகுதியில் உள்ள தாவரங்கள் விலங்குகள் வாழக்கூடிய மனிதர்கள் மற்றும் இயற்கை வளங்கள் நீர் , நிலம், காற்று , விவசாய உற்பத்தி பொருள்கள் மீது ஏற்படுகிற தாக்கம் குறித்தும் அதுபோல் இது கடற்கரைப் பகுதி என்பதால் கடலில் உள்ள கடலில் ஏற்பட்டுள்ள தன்மை மாற்றம் மற்றும் அங்குள்ள உள்ள உயிரினங்கள் தாவரங்கள் குறித்து அதன் மீது கதிரியக்கத் தாக்கம் குறித்தும் முறையாக ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
ஏற்கனவே செல்படும் அணுக்கனிம சுரங்கங்கள் காரணமாக இந்தத் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற பகுதி மற்றும் அருகாமை பகுதியில் உள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள உடல ஆரோக்கிய பிரச்சனை குறித்துமேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் அணு கனிம சுரங்க தொழில் காரணமாக இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மற்றும் நீண்ட நாள் பட்ட வியாதிகளுக்கு மாசு படுத்துபவர் பணம் செலுத்தும் கொள்கை என்ற முறையில் மருத்துவ செலவை இந்த இந்திய அபூர்வ மணல் ஆலை நிறுவனம் ஏற்க வேண்டும்.
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்பட்டுள்ள தாக்கம் அதனோடு இந்த அணு கனிமச்சுரங்க செயல்பாட்டினால் ஏற்படும் தாக்கமும் சேர்ந்து இந்தப் பகுதியில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்த நிறைய வாய்ப்பு உள்ளது . மேலும் ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் நிலங்களை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அணுக்கனிமச்சுரங்க செயல்பாடு அனுமதித்தால் மேலும் கடல் அரிப்பு பிரச்சனை தீவிரமடைந்து பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து இயற்கை பேரிடரால் தாக்கத்துக்கு உள்ளாகும் மாவட்டம் என்பதால் இந்த கனிம சுரங்க திட்டம் இந்தப் பகுதியில் செயல்படுத்தினால் இயற்கை பேரிடர் காரணமாக இந்தத் திட்டத்தின் பாதிப்பும் இணைந்து பேரிடர் பெரும் துயரமாக மாற வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்தப் பகுதியில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிக்கு மாநில அரசு மாவட்ட நிர்வாகம் துணை போகக்கூடாது மாறாக இந்திய அரசியல் சாசனம் சரத்து 21 வழங்கியுள்ள வாழ்வுரிமை பாதுகாக்க இந்தப் பகுதி வாழ் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் அகில இந்திய மீனவர் சங்க தேசிய அமைப்பு செயலாளர் நாஞ்சில் ஜி.ஆர் சேவியர், மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மில்லர், மேற்கு மாவட்ட செயலாளர் தேவதாஸ், குமரி நகர தலைவர் சகாய கர்லின்ஸ், அகில இந்திய தமிழர் கழகம் முத்துகுமார், சிவசக்தி, குழந்தைசாமி, இராதாகிருஷ்ணன், தாமஸ், மாவட்ட அமைப்பாளர் தாமஸ், குட்வின், டோரியன், கிறிஸ்டி சேவியர் , ஜூலியஸ் , கிளின்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.