அஞ்சுகிராமம் மார்ச்-3
அகில இந்திய அளவில் அசாதாரண பணியாற்றும் நிரந்த காவல்துறை பணியாளர்கள்,துணை ஊழியர்கள், ஊர்க்காவல்படையினருக்கு மத்திய அரசு அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம் என்ற சாதனையாளர் விருதும் பதக்கமும் வழங்கி. கொளரவித்து வருகிறது. இந்த வருடம். இந்த விருது கன்னியாகுமரியை அடுத்த ஏழ சாற்று பத்து கிராமத்தை சார்ந்த உதவி ஆய்வாளர் முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியில் சேர்ந்து பல வருடங்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீழ் இயங்கும் சிறப்பு படையில் நேர்மையாகவும், சட்டம், ஒழுங்கு விஷயங்களில் முன்கூட்டியே தகவல் சேகரித்து, நேர்மையான காவல்துறை அதிகாரி என பல தண்ணார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து பல விருதுகள் பெற்றுள்ளார். பின்னர் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து,தற்போழுது
அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், நேர்மையான, கடுமையான போலீஸ் அதிகாரி என்று பெயர் இருந்தாலும், கொரோனா, ஒகி புயல், சுனாமி, கடும்மழை போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மனித நேய பணி அனைவராலும் பாராட்டபட்டது. சிறந்த சேவைக்கான அதி உத்தி ருஷிட் சேவா பதக்கத்தை உதவி ஆய்வாளர் முருகன் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. டாக்டர் ஆர். ஸ்டாலின் வழங்கினார்.