நான் முதல்வர் திறன் மேம்பாட்டு ஹாக்கிதான் போட்டியில்
திண்டுக்கல் ஆத்தூர் கூட்டுறவு மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவருக்கு இரண்டாம் பரிசு!
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் நிர்வாக மாணவன் கார்த்திக் ராஜா, மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற நான் முதல்வர் திறன் மேம்பாட்டு ஹாக்கிதான் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றார் இதையொட்டி
மண்டல இணைப்பதிவாளர் ஸ்ரீகுருமூர்த்தி, இணைப்பதிவாளரும்,ஆத்தூர் கூட்டுறவு மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்லூரி முதல்வருமான சுபாஷினி, கல்லூரி நிர்வாக அலுவலர் ரா.கணேசன், துணைத் தலைவர் தாரணி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.