கோவை ஆகஸ்ட்: 30
கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அத்யாயன இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி இணைந்து நடத்தும் 63 வது கோவை மாவட்ட இளையோர்களுக்கான தடகள போட்டி 8வது மயில்சாமி மற்றும் 3வது சங்கரன் நினைவுக்கோப்பை 2024 -க்கான தடகள போட்டிகள் வ.உசி பூங்கா அருகில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அளவில் நடைபெறும் தடகள போட்டிகளின் தொடக்க விழாவிற்கு கோவை மாவட்ட அத்லெடிக் அசோசேஷன் தலைவர் முனைவர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமை வகித்தார்.
கோவை வடக்கு ஜோன் துணை ஆணையாளர் சரவணக்குமார் மற்றும் அத்யாயனா பள்ளி தாளாளர் சி.கே. அனந்தகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர்.
சிடிஏஏ பொருளாளர் ஜான் சிங்கராயர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்.
வழக்குரைஞர் எம் . கணேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தடகள சங்க செயலாளர் சம்சுதீன் , தொழில்நுட்ப தலைவர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறியதாவது மாவட்ட அளவில் நடைபெறும் தடகள போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள மண்டலம் மற்றும் மாநில போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் . வெற்றி பெற்று தேர்வு செய்த வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் டீசர்ட் வழங்கப்படும் என்றும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தடகள பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து பள்ளி மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.