கோவை டிச:30
தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சியில் கடந்த டிசம்பர் 21 முதல் “பொள்ளாச்சி திருவிழா” நடைபெற்று வருகிறது.
இந்த விழாவானது டிசம்பர் 21 முதல் 29 ம் தேதி வரை 50 மேற்பட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதியாக பொள்ளாச்சி முக்கிய சாலையான மகாலிங்கபுரம் சாலையில் மகிழ்ச்சியான வீதி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இசை குழுக்கள் மற்றும் நடன கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பொதுமக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாலை மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் பறை இசை நிகழ்ச்சியுடன் பொள்ளாச்சி திருவிழா நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் ஜிபி முத்து கலந்து கொண்டார்.மேலும் பொள்ளாச்சி வர்த்தக சபை இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி தொழிலதிபர்கள், வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.