மதுரை ஜூலை 11
மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு பகுதியில் உள்ள தலைமை கழிவு நீரேற்று நிலையத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.26,27,28 செல்லூர் 60 அடி சாலை, அகிம்சாபுரம் 7வது தெரு மற்றும் குறுக்குத் தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புக்களை சரிசெய்வது குறித்தும், செல்லூர் எம்.எம்.லாட்ஜ் அருகில் புதிய பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களை மாற்றியமைப்பது, மற்றும் அடைப்புக்கள் சரிசெய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மண்டலம் 4 வார்டு எண்.29 செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு பகுதியில் உள்ள தலைமை கழிவு நீரேற்று நிலையத்தில் சுமார் 8 வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் இந்த கழிவு நீரேற்று நிலையத்தில் வந்தடைகிறது. கழிவு நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், மின்மோட்டார்கள். கழிவு நீரேற்று தொட்டிகள் பாதுகாப்பு உபகரணங்கள், சுத்திகரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், செல்லூர் 60 அடி சாலை பகுதியில் புதிய தார் சாலை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு
மேற்கொண்டனர். தொடர்ந்து செல்லூர் பந்தல்குடி வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை வாய்க்காலில் கொட்டுவதை கட்டுப்படுத்துமாறும், வாய்க்காலில் பிளாஸ்டிக் மற்றும் தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அகற்றி மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு வழி வகுக்குமாறும், குறிப்பாக வாய்க்கால் சுற்றியுள்ள பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார். செயற்பொறியாளர்கள் சேகர். சுந்தர்ராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள் காமராஜ் மயிலேறிநாதன், உதவிப்பொறியாளர்கள் சந்தனம், கண்ணன், பாஸ்கரபாண்டியன், சுகாதார அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், கோபால் சுகாதார ஆய்வாளர்கள் சுப்புராஜ், முருகன், ராமநாதன், மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல் மாயத்தேவன், சொக்காயி
உமா, லோகமணி உட்பட மாநகராட்சி
அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.